அசாம் மாநிலத்தில் பலதார மணத்தை தடை செய்வதற்கான சட்ட மசோதா, நவம்பர் 25ம் தேதி சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
குவகாத்தியில் இது தொடர்பாக பேசிய அவர், ஒருவர் இரண்டாவது திருமணம் செய்தால், அவர் எந்த மதத்தவராக இருந்தாலும் ஏழு ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்றும்,
பலதார மணத்திற்கு மதம் அனுமதி அளித்தாலும், தனது தலைமையிலான பாஜக அரசு அதனை அனுமதிக்காது என்றும் திட்டவட்டமாக கூறினார்.
மேலும், அசாமில் பெண்களின் கண்ணியம் மற்றும் கௌரவத்தை இறுதிவரை பாதுகாப்போம் என்று உறுதியளித்ததுடன், குழந்தை திருமண ஒழிப்பு, லவ் ஜிகாத் போன்ற சட்டவிரோத திருமணங்களை கட்டுப்படுத்துவது குறித்தும் அரசு கவனம் செலுத்தி வருவதாக ஹிமந்த பிஸ்வ சர்மா குறிப்பிட்டுள்ளார்.
இந்த மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், உத்தராகண்டிற்கு பிறகு பலதார மணத்தை தடை செய்த இரண்டாவது மாநிலமாக அசாம் மாநிலம் உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
















