பிரதமர் மோடியால் மின்னணு உற்பத்தியில் தமிழகம்! மிளிர்வதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், உற்பத்தியை ஊக்குவித்து வேலைவாய்ப்பைப் பெருக்கும் விதமாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டு வரப்பட்ட மின்னணு பாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் (ECMS) கீழ் ₹5,532 கோடி முதலீட்டில் 7 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது வரவேற்பிற்குரியது என தெரிவித்துள்ளார்.
அதிலும் 5 திட்டங்கள் மூலம், 77% முதலீட்டைத் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதோடு, தமிழகத்தின் முன்னேற்றத்தின் மீது நமது மத்திய அரசு கொண்டுள்ள அபரிமிதமான அக்கறையையும் வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
சுமார் ₹4,200 கோடி முதலீட்டின் மூலம் பல்லாயிரக்கணக்கான தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவதோடு தமிழகத்தின் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் வீறுநடையிட வழிவகுத்துள்ள பாரதப் பிரதமர் மோடிக்கும் அதற்கு உறுதுணையாகத் திகழும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிற்கும்
நெஞ்சார்ந்த நன்றிகளையும் நயினார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வளர்ச்சியில் முனைப்புடன் செயலாற்றும் இத்தகைய திறன்மிக்க மத்திய அரசினால் மின்னணு உற்பத்தியில் தமிழகம் முன்னணி வகிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
















