பேரிழப்பை தன்னால் ஈடுசெய்ய முடியாத எனக்கூறி தவெக தலைவர் விஜய்,காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதாக கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஒரு மாதத்திற்குப் பிறகு தவெக தலைவர் விஜய், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் அழைத்து சந்திப்பை நடத்தினார்.
மகாபலிபுரத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஊடகங்களுக்கும், கட்சி உறுப்பினர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.விஜய்-யை சந்தித்து கரூர் திரும்பிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், தவெக தலைவர் விஜய் தங்களிடம் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்துள்ளனர்.
கரூர் சம்பவத்தால் விஜய் மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும், காவல் துறையினரின் அனுமதி கிடைத்தவுடன் கரூர் வந்து நேரில் சந்திக்க உள்ளதாக விஜய் கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.
















