தான் 3-வது முறையாக அமெரிக்க அதிபராவதை அமெரிக்க சட்டம் தடை செய்வது மிகவும் மோசமானது என அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 22வது திருத்தத்தின்படி யாரும் 3வது முறையாக அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட முடியாது. 79 வயதான டிரம்ப் 2-வது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் 3-வது முறையாக அதிபராகப் பதவி வகிக்கத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள வெளியாகின.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் தென்கொரியாவுக்கு செல்லும் முன்னர் டிரம்ப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், உண்மையில் தான் அதுகுறித்து இதுவரை யோசிக்கவில்லை என கூறினார்.
ஆனால், 3-வது முறை அதிபராவதை தடுக்கும் சட்டம் மிகவும் மோசமானது எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
















