தவெக தலைவர் விஜய்யின் அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்குப் பின்னர் கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜ், இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் அடுத்தகட்ட பிரச்சாரம் இருக்கும் என தெரிவித்தனர். இதற்கு முன்பு நடைபெற்ற கூட்டங்களுக்கு காவல்துறை உதவி செய்யவில்லை என்றும் கூறினர். தவெகவை முடங்க வேண்டும் என்று நினைத்தார்கள் என்றும் அது நடக்காது எனறும் தெரிவித்தனர்.
















