மதுரையில் குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழகம் வருகை தந்துள்ளார். பசும்பொன் செல்வதற்காக மதுரை சென்ற அவரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்தார்.
அப்போது திமுக எம்பி கனிமொழி, அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். தொடர்ந்து குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.
















