மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்களின் சிலைகளுக்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முத்துராமலிங்க தேவர் 118வது பிறந்த நாள் மற்றும் 63வது குருபூஜை விழாவில் பங்கேற்பதற்காக மதுரை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் முழங்க பட்டாசுகள் வெடித்து எடப்பாடி பழனிசாமியை உற்சாகமாக வரவேற்றனர்.
இதனை தொடர்ந்து, தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி, பின்பு பசும்பொன் நோக்கி புறப்பட்டார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
















