முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் மற்றும் குரு பூஜையையொட்டி பசும்பொன்னில் உள்ள நினைவிடத்தில் குடியரசு துணை தலைவர், முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 118வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா இரு தினங்களுக்கு முன் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது.
இதனை தொடர்ந்து, முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாள் மற்றும் குரு பூஜை, அரசு விழாவாக நடைபெற்று வரும் நிலையில், பசும்பொன் நினைவிடத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனை அடுத்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
















