பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசிய ராகுல் காந்தி மீது பாஜக சார்பில் பீகார் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பீகார் தேர்தலையொட்டி அம்மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசினார்.
இதற்குப் பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் பொது பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றை மீறி, தனிப்பட்ட முறையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் ராகுல் காந்தி பேசியுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
எனவே, அவருக்குத் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க உத்தரவிட வேண்டும் எனப் பாஜகவினர் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக பீகார் பாஜக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
			 
                    















