ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் பங்கேற்க வந்தவர்கள் வாகனங்களின் மேற்கூரைகளில் ஆபத்தை உணராமல் பயணம் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அசம்பாவிதங்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
ஆனால் விழாவுக்கு வந்த பெரும்பாலான இளைஞர்கள், கார்களின் மேற்கூரையில் ஏறி நின்று, ஆடியபடியும், கோஷமிட்டபடியும் ஆபத்தான முறையில் பயணித்தனர்.
எனவே விதிமீறல்களில் ஈடுபட்ட இளைஞர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
			 
                    















