ராஜராஜ சோழனின் 1040-வது சதய விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் 400 400 நாட்டிய கலைஞர்கள் கலந்துகொண்ட பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நடைபெற்றது
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040-ஆம் ஆண்டு சதய விழாவானது நாளையும், நாளை மறுதினமும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு ராஜராஜ சோழன் வேடமணிந்த நபர் சாரட்டு வாகனத்தில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது.
தஞ்சை அரண்மனை வளாகத்தில் தொடங்கி பெரிய கோயில்வரை நடைபெற்ற ஊர்வலத்தில் ஏராளமான நாட்டுப்புற கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர்.
அதைத்தொடர்ந்து, ராஜராஜ சோழனுக்கு மரியாதை செலுத்தும் விதமாகப் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
இதில் 400 நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நாட்டியம் ஆடியதை ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
 
			 
                    















