மத்திய பிரதேச மாநிலம், போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர், மதுபோதையில் காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் போபால் எய்ம்ஸ் வளாகத்திற்கு வெளியே நடந்ததாகக் கூறப்படுகிறது. ரோந்துப் பணியில் இருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்குரிய முறையில் சென்ற ஒரு வாகனத்தை நிறுத்த முயன்றனர்.
அப்போது வாகனத்தில் இருந்த மருத்துவர் வெளியில் வந்து, பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர், காவலர்களைப் பார்த்து மரியாதை குறைவாகவும், மிரட்டும் வகையிலும் பேசினார். ஆனால் அவருடன் இருந்த நண்பர் மருத்துவரை மிகவும் சிரமப்பட்டு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட மருத்துவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
			 
                    















