அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நீக்கப்பட்ட நிலையில் இன்று விளக்கம் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். .
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் செங்கோட்டையன் ஒன்றாக காரில் பயணித்தார். பின்னர் மூவரும் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
இந்தநிலையில் அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும் கட்சியின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்து கொண்டதால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளார் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து இன்று பேசுவதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டதை ஈரோட்டில் அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கட்சியில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்தது அதிமுகவுக்கு பலம் தான் என்றும், பலவீனம் கிடையாது எனவும் கூறியுள்ளனர்.
இதனிடையே அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது குறித்து இன்று பதில் அளிப்பதாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
















