பிரதமர் மோடி மற்றும் யோகி ஆதித்யநாத் ஆகியோரால் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் காசியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமுதாயத்தால் கட்டப்பட்ட 10 மாடிகள் கொண்ட பிரம்மாண்ட சத்திரத்தை திறந்து வைத்து பேசிய குடியரசுத் துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், 25 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த காசிக்கும் தற்போது இருக்கும் காசிக்கும் இடையே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
இந்த மாற்றம் பிரதமர் மோடி மற்றும் உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகிய இரு கர்மயோகிகளால் சாத்தியமானது என்று புகழாரம் சூட்டினார்.
















