தனிக் கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், முதல் தலைமுறை அரசியல்வாதி என்பதால் தனிக்கட்சி தொடங்க வாய்ப்பு இல்லை என தெரிவித்தார். விவசாயியாக மாற்றத்திற்காக தொடர்ந்து போராடுவேன் என்றும் கூறினார்.
தனக்கு தன்னுடைய உயரம் தெரியும் என்றும், பிரதமர் மீது வைத்துள்ள நம்பிக்கை துளியும் குறையாது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.
















