நடிகர் சிம்புவின் அரசன் திரைப்படத்தின் வீடியோவை பயன்படுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் மீது அவதூறு பரப்புவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றி கழகத்தின் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், DMK Updates என்ற பெயரில் செயல்படும் X தள கணக்கில் வீடியோ வெளியிடப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அந்த வீடியோ X தள பதிவிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள், சிபிஐ தலைமைக்கு டேக் செய்து புகார் அளித்துள்ளனர்.
















