சி.எம்.எஸ் 03 செயற்கைக்கோளின் பயணம் வெற்றி அடைய வேண்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவினர், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு மேற்கொண்டனர்.
இஸ்ரோ, நாளை சி.எம்.எஸ் 03 செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதலத்தில் இருந்து விண்ணில் செலுத்த உள்ளது.
இந்நிலையில் சி.எம்.எஸ் 03 செயற்கைக்கோளின் பயணம் வெற்றியடைய வேண்டி இஸ்ரோ தலைவர் நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் குழுவினர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு மேற்கொண்டனர்.
அப்போது செயற்கைக்கோளின் மாதிரியை ஏழுமலையான் திருவடிகளில் சமர்ப்பித்து விஞ்ஞானிகள் வேண்டிக் கொண்டனர்.
 
			 
                    















