சட்டமன்ற தேர்தலில் பாஜகவினர் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் மாநில அளவிலான சிறப்பு பயிலரங்கத்தில் அவர், நமது கட்சியில் உள்ள தமிழ்நாடு பாஜக தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு என்பதை போல இந்தியாவில் எந்த கட்சியிலும் இல்லை என தெரிவித்தார்.
அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் தேர்தல் தேதியை அறிவித்துவிடுவார்கள்.. ஆகையால் இருக்கும் குறுகிய காலங்களில் நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதுபோன்ற கூட்டம் தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்றும், தேர்தலை மையமாக வைத்து அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றும் நயினார் கேட்டுக்கொண்டார்.
















