சென்னை ராயப்பேட்டையில் IT விங் பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரையும் ஆன்லைன் வாயிலாக ஒருங்கிணைத்து பணிகளை முடுக்கிவிட அக்கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.
இந்த பணிகளை மேற்கொள்ள அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் கலந்தாய்வுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
பிற்பகல் 3.30 மணி அளவில், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, உள்ளிட்ட 20 மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
















