தைவான் மீது தாக்குதல் நடத்தினால் சீனாவுக்கு விளைவுகள் தெரியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், தான் குடியரசுக் கட்சி தலைவர் பதவியில் இருக்கும் வரை, தைவானை இணைக்கும் அதன் நீண்ட கால இலக்கை நோக்கிச் சீனா எந்த நடவடிக்கையும் எடுக்காது எனக் கூறியுள்ளார்.
தைவானை தாக்கினாலோ, ஆக்கிரமித்தாலோ என்ன நடக்கும் என்பது சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு தெரியும் எனவும் தெரிவித்துள்ளார்.
















