உலக கோப்பையுடன் இந்திய வீராங்கனைகள் தூங்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நடைபெற்றது.
இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாகச் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்த நிலையில், மெஸ்ஸி, ரோகித் பாணியில் உலக கோப்பையுடன் இந்திய வீராங்கனைகள் தூங்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
















