பல சமயங்களில் எங்கள் இதயம் நொறுங்கி இருப்பதாக உலக கோப்பை வெற்றி குறித்து ஸ்மிருதி மந்தனா உருக்கமாகப் பேசியுள்ளார்.
கடந்த கால ஏமாற்றங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு பெரிய பொறுப்புணர்ச்சியாக மாறியது என்றும், அந்த அனுபவங்களை நாங்கள் உறுதியாக்கிக் கொண்டு, எங்கள் விளையாட்டை மேம்படுத்தக் கடுமையாக உழைத்தோம் எனவும் கூறியுள்ளார்.
இந்த வெற்றிக்காக 45 நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறோம் என்றும், வெற்றி என்பதை தாண்டி மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கான பொறுப்பு எங்களுக்கு இருப்பதாக நம்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
















