மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்ற எண்ணமில்லாமல், நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னையால் பள்ளியை இழுத்து மூடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே கோடாங்கிபட்டியில் அரசு உதவிபெறும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் நிர்வாகிகளிடையே பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனால், ஒரு தரப்பினர்ப் பள்ளிச் சொத்துக்களைச் சேதப்படுத்தியதாகவும், ஆசிரியப் பெருமக்களைத் தரக்குறைவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு, பள்ளிக்குப் பூட்டு போடப்பட்டது. எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பள்ளியைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மாவட்ட எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
















