ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நாளைப் புதிய புல்லட் 650 பைக்கை அறிமுகப்படுத்தவுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் ஐரோப்பாவில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் EICMA நிகழ்வு நடைபெறும்.
இருசக்கர மோட்டார் வாகனங்களுக்கான பிரத்தியேக நிகழ்வாக இது நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப், ராயல் என்ஃபீல்டு, அல்ட்ராவைலட் மற்றும் டிவிஎஸ் உள்ளிட்ட பல்வேறு பைத் தயாரிப்பு நிறுவனங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது வழக்கம்.
அந்தவகையில், அனைவரும் அதிகம் எதிர்பார்க்கும் ராயல் என்ஃபீல்டு புல்லட் 650 பைக்கும் இந்த நிகழ்வில் நாளை வெளியாகவுள்ளது.
















