காசாவுக்குள் உதவி பொருட்களுடன் நுழைந்த லாரியை ஹமாஸ் அமைப்பினர் சூறையாடிய காட்சிகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற போர், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையீட்டால் முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் தங்களது உடைமைகளை இழந்துள்ளனர்.
காசாவில் பஞ்சம் தலைவிரித்தாடும் நிலையில், ஏராளமான உலக நாடுகள் மனிதாபிமான அடிப்படையில் உணவு உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வருகின்றன. அதன்படி எகிப்து எல்லையில் காத்துக் கிடக்கும் உதவி பொருட்கள் அடங்கிய லாரிகள், அவ்வப்போது காசாவுக்குள் நுழைய இஸ்ரேல் அனுமதித்து வருகிறது.
அந்த வகையில் உதவி பொருட்கள் அடங்கிய லாரி ஒன்று காசாவுக்குள் நுழைந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள், தங்கள் பசி தீர்க்க உதவி கிடைத்ததை எண்ணி அங்கு திரண்டிருந்தனர்.
ஆனால், அப்போது அங்கு வந்த ஹமாஸ் அமைப்பினர், உதவி பொருட்கள் அடங்கிய லாரியைச் சூறையாடி திருடிச் சென்றனர். இது தொடர்பான டிரோன் காட்சிகளை அமெரிக்கா இணையத்தில் வெளியிட்டுள்ளது.
















