ரீரிலீசான பாகுபலி தி எபிக் படம் 45 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.
2015ஆம் ஆண்டு முதல் பாகம் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து, 2017ஆம் ஆண்டு பாகுபலி 2 வெளிவந்தது.
பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளியான பாகுபலி 2 உலகளவில் 1800 கோடி வசூல் செய்து சாதனைப் படைத்தது.
இந்த நிலையில், பாகுபலி படம் வெளிவந்து 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், இரண்டு பாகங்களையும் சேர்த்து பாகுபலி தி எபிக் என்கிற படத்தை ரீ ரிலீஸ் செய்துள்ளனர். இப்படம் இதுவரை 45 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
















