மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை கண்டித்து நாளை மறுநாள் தமிழகம் முழுவதும் பாஜகச் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
கோவைப் பீளமேட்டில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை கண்டித்துத் தமிழகம் முழுவதும் பாஜகச் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெரும் என்றும் திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் தினந்தோறும் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
முதலமைச்சர் இதுவரை எந்த அறிக்கையும் தரவில்லை என்று அவர் இது குறித்து விளக்கம் தர வேண்டும் என்றும் காவல்துறை இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
பெண்களை அவமதிக்கும் ஆட்சியாகத் திமுக ஆட்சி உள்ளது என்றும் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்..? என்று கேள்வி எழுப்பிய நயினார் நாகேந்திரன் திமுக ஆட்சி பாலியல் மாடல் ஆட்சியாக உள்ளது என்று அவர் கூறினார்.
போலீஸ் ரோந்து இல்லை என்பதைத் தெரிந்து கொண்டுதான் குற்றங்கள் நிகழ்கின்றன என்றும் பாலியல் வன்கொடுமைக் குற்றங்களில் ஈடுபடுவோரைத் தூக்கிலிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
















