மும்பையில் பிடிபட்ட போலி விஞ்ஞானி 40 முறை வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
மும்பையில் கடந்த வாரம் அக்தர் உசைனி என்பவர்க் கைது செய்யப்பட்டார். அவர் தன்னை மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுவதாக தெரிவித்துக் கொண்டார்.
அவரிடம் இதற்கான போலி அடையாள அட்டையும் இருந்தது. அவரிடம் விசாரித்தபோது, 1995-ம் ஆண்டிலிருந்து வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றுள்ளார்.
ஆனால் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு கோடிகளில் பணம் பெற்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
















