ஜம்மு – காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளதால் உள்ளூர் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜம்மு – காஷ்மீரின் சுற்றுலா தளமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான, தி ரெசிஸ்டென்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது.
இதனையடுத்து ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்திய பாதுகாப்பு படை பாடம் புகட்டியது. அத்துடன் ஆப்ரேஷன் மகாதேவ் மூலம் பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மூவரையும் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.
பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்குப் பின்னர் பஹல்காமில் சுற்றுலாவை நம்பி பிழைப்பு நடத்திய உள்ளூர் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் பஹல்காமில் ராணுவ கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாகப் பஹல்காமின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளில் மீண்டும் சினிமா படப்பிடிப்புகள் தொடங்கியுள்ளன.
இதனால் மீண்டும் தங்கள் பொருளாதாரம் மேம்படும் என்பதால் உள்ளூர் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
















