ஓபிஎஸ் ஆதரவாளரும், ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தார்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் மனோஜ் பாண்டியன்.
அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றிபெற்ற மனோஜ் பாண்டியன், ஓ.பன்னீர்ச் செல்வத்தின் ஆதரவளராக இருந்து வந்தார்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, அக்கட்சியில் மனோஜ் பாண்டியன் தன்னை இணைத்துக் கொண்டார்.
அப்போது திமுக மூத்த நிர்வாகிகள் துரை முருகன், கே.என்.நேரு, கனிமொழி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் பாண்டியன், தனது எம்எல்ஏ பதவியை முறைப்படி ராஜினாமா செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.
			















