கடந்த 3 ஆண்டுகளில், தனது சொந்தச் செலவில் 13 சிறுமிகளை மனிதக் கடத்தலில் இருந்து மீட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியதாகக் கனடாவை சேர்ந்த யூடியூபர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய-கனடா யூடியூபரான குஷால் மெஹ்ரா, பல இந்திய மாணவர்கள், குடியுரிமைக்கான போலி கல்லூரிகளுக்குப் பலியாகி, தங்கள் எதிர்காலத்தை இழந்திருப்பதாகத் தெரிவித்தார்.
வேலை வாய்ப்பின்மை, அதிகரித்து வரும் இனவெறி உணர்வுகள் மற்றும் சுரண்டல் காரணமாக, இந்தியப் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை உயர் கல்விக்காக கனடாவுக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று மெஹ்ரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளில், தனது சொந்தச் செலவில் 13 சிறுமிகளை மனிதக் கடத்தலில் இருந்து மீட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பியதாக அவர் கூறினார்.
13 சிறுமிகளும் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்பட்டதால் அவர்களுக்கு உதவியதாக அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
டொராண்டோவில் மட்டும், இந்தியாவைச் சேர்ந்த மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் தொழிலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குஷால் மெஹ்ரா கூறினார்.
			















