மத்திய அரசிடம் இருந்து மானிய உதவி பெறும் தன்னார்வ நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யக் காந்த், உஜ்ஜல் புயான், மற்றும் ஜோய்மால்யா பாக்ஸி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்தக் கோரிக்கை அரசின் கொள்கைச் சார்ந்த விஷயம் எனக் கருத்து தெரிவித்த நீதிபதிகள், எந்தவொரு குறிப்பிட்ட அமைப்பிலும் இடஒதுக்கீட்டில் நிபந்தனைகளை நிர்ணயிப்பது கொள்கை வகுப்பாளர்களின் சிறப்புரிமை என்றும் கூறினார்.
எனவே அரசின் கொள்கை முடிவுகள் குறித்து நீதிமன்றம் தலையிட முடியாது என்பதைத் தெளிவுபடுத்திய உச்சநீதிமன்றம், இடஒதுக்கீடு கோரி அரசிடம் விரிவான முறையீட்டைச் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியது.
			















