அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆதாரங்களை மறைத்ததாக அண்ணாமலைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாகச் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, ஞானசேகரன் யார், யாரிடம் தொலைபேசியில் பேசினார் என்ற ஆதாரம் தன்னிடம் உள்ளதாகக் கூறி இருந்தார்.
இதனையடுத்து, ஆதாரங்களை மறைத்ததாகக் கூறி அண்ணாமலையிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், தவறான தகவலை வெளியிட்டு இருந்தால் தண்டிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இது குறித்த விசாரணையில், மனுதாரருக்கும் இந்தச் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
பின்னர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
















