வாக்காளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக முகவர்களுக்கான சீட்டுகளை அதிகாரிகள் இல்லாமல் அரசியல் கட்சியினர் கொடுப்பதாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கி உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் ஏஜென்டுகளுக்கு சட்டமன்றத் தொகுதி வாரியாகப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாகப் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி ஏஜெண்டுகளுக்குப் பயிற்சி அதிகாரி பயிற்சிகளை அளித்தார்.
இதில் பாஜக, அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, வாக்காளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பாக முகவர்களுக்கான சீட்டுகளை அரசியல் கட்சியினர் சிலர் வாக்காளர்களுக்கு அரசு ஊழியர்கள் இல்லாமல் அவர்களே கொடுப்பதாகக் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, இதுகுறித்து புகார் அளித்து உறுதி செய்யப்பட்டால் அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கோபமாகப் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
















