வாரிசு அரசியலை விமர்சித்துக் காங்கிரஸ் எம்பி சசிதரூர் கட்டுரை எழுதியுள்ளதையடுத்து, அவர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனப் பாஜக அறிவுறுத்தி உள்ளது.
இந்திய ஜனநாயகத்துக்கு வாரிசு அரசியல் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகக் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கட்டுரை எழுதியிருந்தார்.
அதில், பல ஆண்டுகளாக இந்திய அரசியலில் ஒரு குடும்பம் செல்வாக்கை செலுத்தி வருவதாகவும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேரு, பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்.பி. பிரியங்கா காந்தி உள்பட நேரு-காந்தி குடும்பத்தின் செல்வாக்கு இந்திய அரசியலில் முக்கிய இடம்பிடித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
இது காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாஜவின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், சசி தரூர் ஆபத்தான வீரராக மாறியுள்ளார் என்றும், 2017-ல் ராகுலை விமர்சித்தபோது தனக்கு என்ன நடந்தது என்று தங்களுக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன் என்றும் காங்கிரஸ் முதல் குடும்பத்தினர் பழிவாங்கும் எண்ணம் கொண்டவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
















