உதயநிதியை முதலமைச்சராக்கும் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அவிநாசியில் பேசிய அவர், பெருகி வரும் போதைப்பொருள் பழக்கமே கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என தெரிவித்தார்.”கோவையில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகரிக்க திமுக அரசே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் மீது குற்றம்சாட்டி ஒரு சட்டமன்ற உறுப்பினரே பேசலாமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றும், உதயநிதியை முதலமைச்சராக்கும் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். திராவிட மாடல் ஆட்சியில் கோவை மாவட்டம் சீரழிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
















