தேனி மாவட்டம் கடமலை குண்டு சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்திருந்தது. இந்நிலையில் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இதேபோல் ஓசூர் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
















