வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றி விட்டதாகவும், தன் சொந்த செலவில் திட்டங்களை நிறைவேற்ற தயாராக உள்ளதாகவும் தென்காசி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இரட்டைக் குளம் கால்வாய் திட்டம் நிறைவேற்றவில்லை என தெரிவித்தார். எங்கு சென்றாலும் மக்கள் கேள்வி கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் வாக்கு சேகரிக்க விடமாட்டார்கள் என்றும் அவர் கூறினார்-
செல்லும் இடமெல்லாம் மக்கள் திட்டுவதாகவும் எம்.எல்.ஏ வேதனை தெரிவித்தார்.
















