பிரதமர் மோடியின் சரும பராமரிப்பு குறித்து இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் தியோல் கேள்வி எழுப்பிய காட்சிகள் வைரலாகி வருகின்றன.
கடந்த நவம்பர் 2-ம் தேதி 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
52 ஆண்டு உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பையை உச்சிமுகர்வது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணியினர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.
அப்போது பேசிய ஹர்லீன் தியோல், உங்கள் சரும பராமரிப்பு குறித்து கூறுங்கள் எனப் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.
வீராங்கனையின் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் மோடி, 25 ஆண்டுகளாக அரசாங்கங்களின் தலைவராக இருந்து வருவதாகவும், மக்களின் ஆசீர்வாதங்களே தன்னை பிரகாசிக்க வைப்பதாகவும் பதிலளித்தார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
















