மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள காலணி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
கொல்கத்தாவின் ஆர்.என். முகர்ஜி சாலையில் காலணி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு, முழுவதுமாக எரிந்து கருகியது.
தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















