ஆப்கானிஸ்தானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் மட்டுமே நடக்கும் எனப் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறியுள்ளார்.
கடந்த அக்டோபர் 9-ம் தேதி, காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தக் குண்டுவெடிப்புக்குப் பாகிஸ்தான் மீது ஆப்கனிஸ்தானின் தலிபான் அரசுக் குற்றம் சாட்டியது. இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராகத் தலிபான் அரசுப் பதில் தாக்குதல் நடத்தியதால், இரு நாட்டு எல்லையில் பதற்றம் அதிகரித்தது.
கத்தாரும் துருக்கியும் மேற்கொண்ட சமரச முயற்சியை அடுத்து போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
ஆனால் இரண்டாம் கட்ட போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் ஊடகமொன்றுக்கு பேட்டியளித்த பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் போர் மட்டுமே நடக்கும் எனக் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் அரசாங்கம் தனது பொருளாதார தோல்விகளை மறைக்கப் பிற நாடுகளைச் சீண்டி தாக்குதல் நடத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
















