தென்காசி மாவட்டத்தில் கல்குவாரிகளை ஆய்வு செய்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இறுதி அவகாசம் வழங்கியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத கல்குவாரிகள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 45 கல்குவாரிகள் உள்ளதாகவும், அவற்றை டிரோன் மூலமாக அளவிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, பணிகள் நிறைவடைந்தால் அதற்கான அறிக்கை எங்கே? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்ய இறுதி அவகாசம் வழங்கி விசாரணையை ஒத்திவைத்தனர்.
















