ஒப்பந்ததாரர்கள் தேர்வில், அமைச்சர் துரைமுருகன் பிடிவாதம் காட்டுவதால், மணல் குவாரிகள் திறப்பு முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், 30 இடங்களில் மணல் குவாரிகள் திறக்க சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட நிலையில், எட்டு குவாரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, புதுக்கோட்டை, கடலூர், தஞ்சாவூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் எட்டு இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இந்த குவாரிகளில்,மணல் அள்ளி, யார்டுகளுக்கு கொண்டு வரும் பொறுப்பு மயிலாடுதுறையை சேர்ந்த ராஜப்பா என்பவரிடம், ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், ஏற்கனவே ஒப்பந்ததாரராக இருக்கும் புதுக்கோட்டையை சேர்ந்தவருக்கு, மீண்டும் அந்த ஒப்பந்தத்தை வழங்க, அமைச்சர் துரைமுருகன் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது.
அமைச்சர் துரைமுருகனின் இந்த பிடிவாதத்தால் மணல் குவாரி திறப்பு பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
















