வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு உட்கட்டமைப்புகள் முக்கிய உந்து சக்தியாக விளங்குவதாக என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ரயில்வே உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டதற்கு மிகச் சிறந்த உதாரணமாக வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ரயில் சேவை விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ரயில் நிலையத்திலிருந்து பனாரஸ் – கஜுராஷோ, லக்னோ – ஷஹாரான்பூர், பெரோஸ்பூர் – டெல்லி மற்றும் எர்ணாகுளம் – பெங்களூரு ஆகிய 4 வழித்தடங்களில் புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், பனாரஸ் – கஜுராஹோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்து மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
இதனையடுத்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகில் வளர்ந்த நாடுகள் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்திருப்பதற்கு உள்கட்டமைப்புகளே முக்கிய காரணம் என்றும் இந்தியாவும் வளர்ச்சிப் பாதையில் வேகமாகச் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். புனித யாத்திரைத் தலங்கள் வந்தே பாரத் நெட்வொர்க் மூலம் இணைக்கப்படுவதாகவும், பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
















