கர்நாடகாவில் கரும்புக்கு குறைந்த பட்ச ஆதரவு விலையாக டன்னுக்கு 3 ஆயிரத்து 300 வழங்கப்படும் என மாநில அரசு அறிவித்ததை விவசாயிகள் பட்டாசு வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
பெலகாவியில் கரும்புக்கு உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கரும்பு டன்னுக்கு 3 ஆயிரத்து 300 ரூபாய் வழங்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
இதையடுத்து இரவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
















