ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றிய குழுவில் முதன் முறையாகப் பெண் மாற்றுத்திறனாளி நியமன குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் நியமன குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நெமிலி ஒன்றிய குழு நியமன குழு உறுப்பினராகச் சயனபுரத்தைச் சேர்ந்த உமா என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதற்கான சான்றிதழை நெமிலி ஒன்றிய குழுத் தலைவர் வடிவேலு, உமாவிடம் வழங்கினார்.
















