விருதுநகரில் நள்ளிரவு பெய்த மழை காரணமாக ஆத்துமேடு பகுதியில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட 34, 35வது வார்டுகளை உள்ளடக்கிய ஆத்துமேடு பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
கௌசிகா மகாநதி ஆற்றங்கரையை ஒட்டியுள்ள ஆத்துமேடு பகுதியில் தேங்கும் மழைநீர் நதியில் கலந்து வந்த நிலையில், நள்ளிரவு பெய்த கனமழை காரணமாக 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆத்துமேடு பகுதியில் 3 அடியில் இருந்த கழிவுநீர் கால்வாயை ஒன்றரை அடியாக நகராட்சி நிர்வாகம் சுருக்கியதாகவும், இதன் காரணமாகவே வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
எனவே முறையாக கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















