தலைநகர் டெல்லியில் வழக்கறிஞர்களுக்கான வாக்கத்தானை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வழக்கறிஞர்கள் மற்றும் நீதித்துறை பணியாளர்களிடையே ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த வாக்கத்தான் நடத்தப்பட்டது.
இதில் வழக்கறிஞர்கள் உட்பட நீதித்துறையைச் சேர்ந்த பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். உச்சநீதிமன்றத்திலிருந்து தொடங்கிய இந்த வாக்கத்தான் இந்தியா கேட் வரை நடைபெற்றது.
















