அங்கீகாரம் இல்லாத தளங்கள்மூலம் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு செய்வது ஆபத்தானது என்று இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆன்லைன் மூலம் டிஜிட்டல் தங்கம் வாங்குவோருக்கு எந்தவித சட்டப் பாதுகாப்பும் இல்லை எனவும், கட்டுப்பாடற்ற ஆன்லைன் தளங்களால் வழங்கப்படும் “டிஜிட்டல் தங்கம்” அல்லது “இ-தங்கம்” தயாரிப்புகளில் முதலீடு செய்வது பாதுகாப்பற்றது என்றும் செபி எச்சரித்துள்ளது.
தங்கப் பத்திரங்கள் அல்லது சரக்கு வர்த்தகப் பொருட்களின் கீழ் டிஜிட்டல் தங்கம் அங்கீகரிக்கப்படவில்லை எனவும், இவை செபி அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் வராது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரம், Gold ETF மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் வழியான தங்க முதலீடுகள் செபிக்கு கட்டுப்பட்டவை மற்றும் பாதுகாப்பானவை எனவும், நாட்டில் ஆன்லைன் தங்க முதலீட்டில் மக்களின் கவனம் திரும்பியுள்ள நிலையில், அதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் செபி எச்சரித்துள்ளது.
















