உருவகேலி செய்த யூடியூபரின் போலி மன்னிப்பை ஏற்கமாட்டேன் என நடிகை கவுரி கிஷன் தெரிவித்துள்ளார்.
இதற்கு வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியிட்டுள்ளார். இந்நிலையில், அந்த வீடியோவைப் பகிர்ந்த கவுரி கிஷன், பொறுப்புணர்வில்லாத மன்னிப்பு என்பது மன்னிப்பே அல்ல என்றும், மேடைத்தனத்துடன் கூடிய போலி வார்த்தைகளால் வெளிப்படும் மன்னிப்பை நான் ஏற்கமாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
















